MARC காட்சி

Back
விலங்குகள், மனிதர்கள், திமிலுள்ள மாடுகள், மான், நாய், யானை
000 : nam a22 7a 4500
008 : 221017b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a விலங்குகள், மனிதர்கள், திமிலுள்ள மாடுகள், மான், நாய், யானை
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள மலை கிராமம் அருகுவேலி. இங்கு பளியர் இன பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்இவ்விடம் பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் வருசநாடு மலைத்தொடரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கே, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது மக்கள் வாழ்வதற்கு தகுதியான இருப்பிடம்இங்கே ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியங்களாகவும், அடர் வண்ண ஓவியங்களாகவும் உள்ளது. இதில் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளனஇவற்றில் விலங்குகளும் மனிதர்களும் தனித்தனியாகவும் குழுவாகவும் காணப்படுகிறதுஅடர்வண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் யாவும் மாடுகளையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுஇங்கு காணப்படும் மாடுகள் பெரிய திமில்களோடும் பெரிய கொம்புகளோடும் மிக நேர்த்தியான உடலமைப்புடன், பக்கவாட்டு தோற்றத்தில் வரையப்பட்டுள்ளனஇவ்வோவியங்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கால்நடை சமூகத்தின் ஓவியப் படைப்புகளாக கருதப்படுகிறதுஅதுபோல கோட்டோவியத்தில் வரையப்பட்ட உருவங்களில், மாடு, மான். நாய், யானை மற்றும் அடையாளம் காண இயலா உருவங்கள் தனியாக வரையப்பட்டுள்ளதுமேலும் மனித உருவங்கள் குதிரையின் மீதேறி குழுவாக சண்டையிடும் காட்சிகள் மற்றும் வேட்டைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளதுஇவை பெருங்கற்காலத்து ஓவியங்களை ஒத்து அமைந்துள்ளதுஇங்குள்ள ஒவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

653 : _ _ |a ஓவியம், பாறை ஓவியம், வரலாற்றுக்கு முந்தைய, தமிழ்நாடு, மலைக்குகை, மலைத்தொடர்,வருசநாடு, அருகுவேலி,தேனி, வெள்ளை வண்ணம், அடர் வண்ணம், மான், மாடு, திமிலுள்ள மாடு, நாய், யானை, சண்டைக் காட்சிகள், குழு
700 : _ _ |a க.த. காந்திராஜன்
752 : _ _ |a சித்ரகல் பெடவு- வருசநாடு மலைத்தொடர் |b # |c அருகுவேலி |d மதுரை |f மயிலாடும்பாறை
914 : _ _ |a 9.72552441508044
915 : _ _ |a 77.5121034478209
995 : _ _ |a TVA_PNT_0000246
barcode : TVA_PNT_0000246
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0001.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0002.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0003.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0004.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0005.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0006.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0007.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0008.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0009.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0010.jpg

TVA_PNT_00063_அருகுவேலி_மயிலாடும்பாறை_தேனி-0011.jpg